பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் நான் மாடியில் படித்துக்கொண்டிருந்தேன். அவ்வருடம் நான் முக்கியமான பரிட்சைக்கு தயாராக வேண்டும். நான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல தகுதி பெற்றிருக்கிறேனா என்பதனை நிர்ணயிக்கப்போகின்ற பரிட்சை. அன்று தொலைக்காட்சியில் சாந்தி திரைப்படம் காண்பிக்கப்படவிருந்தது. பார்க்க ஆசைதான் இருப்பினும் நான் படிக்கப்போகிறேன் என மேல் மாடியில் இருந்த கூடத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். கீழே நடப்பவை அனைத்தும் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. தொலைக்காட்சியில் படம் ஆரம்பிக்கப்பட்டு எனது பெற்றோர்கள் எங்களது பலசரக்குக் கடையை கவனித்தவாறு படத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை நான் அறிவேன். எதுவும் எனது சிந்தனையை திசை திருப்பாதவாறு பாடப்புத்தகத்தில் மும்முரமாக இருந்தேன்.
திடீரென ஓர் இசை காற்று வாக்கில் இழைந்தோடி செவிகளில் ரீங்காரமிட்டது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, டி. எம். எஸ். மென்மையான குரலில் பாடத்துவங்கினார்.
ஏற்கெனவே பலமுறை கேட்டு ரசித்தது தான். ஆனால் அந்த மாலைப்பொழுதில் மிகவும் இரம்மியமாக காற்றோடு கலந்துவந்து நெஞ்சத்தை தொட்ட விதத்தை இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.
பாடலைக்கேட்டதும் துள்ளியோடிக்கொண்டு கீழே சென்று தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்துக்கொள்ளுமாறு என மனம் சொன்னது. ஆனால் நான் அது சொன்னதைக்கேட்கவில்லை. நான் தான் பரிட்சைக்கு படிக்கவேண்டுமே. இப்போது நினைத்துப்பார்த்தால் பேசாமல் அப்படியே செய்திருக்கலாம் போலிருக்கிறது.
பாடல் முடிகின்ற வரையில் என் சிந்தனை படிப்பில் கொஞ்சம் கூட செல்லவில்லை!
இசையை இதோ கேட்போம்.
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
ஆடிய நாடகம் முடியவில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு..
நான் வந்த வரவு..
பாடல் வரிகள்: http://geekay1956.blogspot.com/2014/05/1965_6448.html

No comments:
Post a Comment