Search This Blog

Tuesday, May 5, 2020

விளங்காமலேயே போய்விடுமோ?

என்னுள் பல ஆண்டுகளாகவே ஒரு கேள்வி உலாவிக்கொண்டிருக்கிறது.

மேல் நாடுகளில் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கு அனுப்பப்படும் எழுத்தோவியங்கள் இலவசமாக அனுப்பப்பட்டதாக பார்க்கப்படுவதில்லை. அப்படியே ஏதும் கொடுக்கப்படுவதில்லை என்றாலும், அது முதலிலேயே தெரிவிக்கப்படும். ஒரு புது எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவருடைய ஒரு கதையோ கட்டுரையோ பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால், அதற்குரிய பணம் சொன்னபடியே உடனே வந்து சேர்ந்து விடுகிறது.

நான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரையை ஒரு வெளிநாட்டு சஞ்சிகைக்கு சமர்ப்பித்தேன். அப்போது தான் வெளிநாட்டுக்கு முதன்முறையாகச் சென்று சில வருடங்கள் அங்கே வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு முன்பு நான் எனது ஊரில் சில கதை, கட்டுரை, புதுக்கவிதைகளை தமிழில் எழுதியிருக்கிறேன்.  பெரிதாக சொல்லுமளவுக்கு ஒன்றுமில்லை. ஆனால் மிகுந்த ஆர்வம் இருந்தது, அவ்வப்பொழுது ஏதோ கொஞ்சம் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் எழுதி அனுப்புவதைக்காட்டிலும் எனது கணினியிலேயே திருப்தியில்லா காரணதால் முடங்கிக்கிடப்பவைதான் அதிகம் எனலாம்.

இப்பொழுது வெளிநாட்டுக்குச் சென்றபோது எனது கவனம் ஆங்கில மொழியின்பால் திரும்பியது. பள்ளி மாணவர்களுக்கானதொரு ஏறக்குறைய 2000 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை தான் ஒரு சஞ்சிகைக்கு அனுப்பினேன். அதன் ஒரு பகுதி இதோ:



Shouts of “Jiye Bhutto!” (long live Bhutto!) were heard in Pakistan for a very long time, that day in December 1988.  The people were happy. Benazir Bhutto had just been sworn in as the Prime Minister of the Islamic Republic of Pakistan.  After nearly eleven years, democracy had finally been restored. 
Benazir, on that day, a mother of a two-month-old baby, rode around the towns in her dupatta, a scarf like shawl covering her hair.  She had carried on her late father’s legacy and had attained the highest level ever reached by a Muslim woman in the world.  It had not been an easy pathway for her, just like for all the female leaders around the world.  Benazir Bhutto had been the first of four children born into the Bhutto family in Karachi, on Jun 21st 1953.  As a baby she had rosy skin and was nicknamed “Pinkie”.

நான் அனுப்பியது அதுவரையில் நான் கேள்விப்படாத ஒரு சஞ்சிகையாகும் வேறொரு மாநிலத்தின் தலைநகரில் செயல்பட்டு வந்த பதிப்பு. அதில் வேலை செய்தவர்களின் சகாயம் எனக்கு ஏதுமில்லை.

கட்டுரையை அனுப்பிய ஒரு மாதத்தில் ஒரு செக் வீடு தேடி வந்தது. அதோடு அந்தப் பதிப்பில் எனது கட்டுரை வெளியிடப்பட்ட இதழின் ஒரு பிரதியும் இருந்தது.

எனக்கு வியப்பு மேலிட்டது. இதுவரை கண்டிராத ஒன்றாக இது இருந்தது. எனது எழுத்துக்கு இப்படியும் ஓர் அங்கீகாரமா? கிடைத்தது பதினைந்து டாலர்தான் ஆனால் அது இதுவரையில் எனது சொந்த ஊரில் கிடைத்திராத ஒன்றாக இருந்தது.

எனக்கு விளங்கவில்லை. என்னைக்காட்டிலும் தமிழில் எழுதிக்குவித்தவர்கள் அதிகம். புத்தகங்கள் வெளியிட்டால் ஏதோ கொஞ்சம் பணத்தைப் பார்த்திருப்பார்கள். அவர்களுடைய ஏனைய எழுத்துக்கள்? இலவசமாகவே எழுதப்பட்டது ஆயிற்றே. அவர்களுடைய எழுத்துக்களைக்கொண்டு பேரும் புகழும் அடைவோர் இருக்கையில் பதிப்பிக்கும் துறையில் இருக்கின்ற போது, இந்த எழுத்தாளர்கள்?

இன்னமும் தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், இனாமாக.

இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் எழுவதால்தான் சிலர் சிறிது காலம் கழித்து மறைந்தே போகிறார்களோ?




No comments:

Post a Comment

நினைவுகளின் பதிப்பு - கால விரயமா?

பாடல் வரிகளையும் பிடித்தமான வாசகங்களையும் ஓர் அழகிய நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இதை நான் ரொம்ப நாளாகவ...